வசூல் மன்னன் விஜய் - முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Vijay Tamil Cinema Tamil Actors Tamil Actress Thamizhaga Vetri Kazhagam
By Jiyath Jun 22, 2024 01:10 PM GMT
Report

நடிகர் விஜய் தனது முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் பற்றிய தகவல். 

நடிகர் விஜய் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் விஜய். நாளைய தீர்ப்பு என்ற படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவருக்கு, தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

வசூல் மன்னன் விஜய் - முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..? | Actor Vijay S First Film Salary

விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். மேலும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களுடன் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்றும், முழு நேர மக்கள் பணியில் களமிறங்க இருப்பதாகவும் அறிவித்தார்.

18 வயதில் அதற்காக அழைத்தார்; அந்த உச்ச நடிகர் சொன்னது.. - விஜய் பட நடிகை பகீர்!

18 வயதில் அதற்காக அழைத்தார்; அந்த உச்ச நடிகர் சொன்னது.. - விஜய் பட நடிகை பகீர்!

முதல் சம்பளம் 

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதனிடையே வசூல் மன்னன் என்று தமிழ் திரையுலகில் பெயர் பெற்ற நடிகர் விஜய் தனது, கடைசி படத்திற்கு ரூ. 250 கோடி சம்பளமாக பெறவுள்ளார் என்று தகவல் பரவியது.

வசூல் மன்னன் விஜய் - முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..? | Actor Vijay S First Film Salary

இவர் 1984-ம் ஆண்டு வெளியான வெற்றி என்ற படத்தில் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் ரூ.500. இதனை அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.