விஜய் – எஸ்.ஏ.சந்திரசேகரை பிரித்தது இவர்தானாம்...? - வெளியான தகவல்...! - ஷாக்கான ரசிகர்கள்...!

Vijay S. A. Chandrasekhar
By Nandhini Jan 11, 2023 02:45 PM GMT
Report

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். இவர் 80களில் மிகப்பெரிய இயக்குனராக வலம் வந்தார். இவர் பல வெற்றி திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

விஜய்யை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்ததே இவர்தான். விஜய்யை வைத்து சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். என்னதான் திரையுலகில் முன்னணி நடிகராக விஜய் வலம் வந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் அப்பா – அம்மாவுடன் சில கருத்து வேறுபாடுடன் இருந்து வருகிறார்.

actor-vijay-s-a-chandrasekhar-indian-film-director

பிரிவுக்கு இவர்தான் காரணமாம்...?

சமீபத்தில், சினிமா பத்திரிக்கையாளர் செய்யூர் பாலு ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

‘துப்பாக்கி’ படத்திற்கு முன்பு வரை நடிகர் விஜய் நடிக்கும் படங்களின் கதையை எஸ்.ஏ.சந்திரசேகர்தான் முடிவு செய்வாராம்.

விஜய்க்கான சம்பளத்தையும் அவரே பேசி வாங்கி கொள்வாராம். இப்படி எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்து செய்ததால், விஜய் மனைவி சங்கீதாவிற்கு ஒரு கட்டத்திற்கு மேல் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய்யிடம், ‘ஏன் நீங்களே கதை கேட்கக்கூடாதா?… உங்கள் பெயரிலேயே செக் வாங்க கூடாதா?.. என்று உசுப்பேத்தியுள்ளார்.

இதுவும் சரிதான் என்று நினைத்த விஜய், அப்பா எஸ்.ஏ.சியிடம் இதுபற்றி பேச, எல்லோர் வீட்டிலும் நடப்பது போல் அவர்கள் வீட்டிலும் பூகம்பம் வெடித்துள்ளது.

அதன் பிறகே, விஜய் ‘இனிமேல் எல்லாவற்றையும் நானே பார்த்து கொள்கிறேன்’ என்று கூறி தனியாக செயல்பட தொடங்கியுள்ளார். தந்தை வைத்திருந்த ஆட்கள் அனைவரையும் தூக்கிவிட்டு, வேறு ஆட்களை நியமித்துள்ளார்.

மேலும், தனக்கான கதை, சம்பளம் என எல்லாவற்றையும் விஜய்யே டீல் செய்துள்ளார். அதோடு, தந்தை – தாயை பிரிந்து சென்னை நீலாங்கரையில் தனியாக வீடு கட்டி தனிக்குடித்தனம் சென்றுவிட்டார். தற்போது விஜய்க்கும், அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே பேச்சுவார்த்தை எதுவும் கிடையாது என்றார்.