சினிமால இருந்து விலகுறியா? விஜய் சொன்ன அந்த வார்த்தை - சஞ்சீவ் பகிர்ந்த ரகசியம்!

Vijay
By Jiyath Jun 27, 2024 04:22 PM GMT
Report

விஜய் சினிமாவிலிருந்து விலகுவது குறித்து நடிகர் சஞ்சீவ் பேசியுள்ளார்.

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் விஜய். நாளைய தீர்ப்பு என்ற படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவருக்கு, தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

சினிமால இருந்து விலகுறியா? விஜய் சொன்ன அந்த வார்த்தை - சஞ்சீவ் பகிர்ந்த ரகசியம்! | Actor Vijay Quit Cinema Friend Sanjeev Emotional

மேலும், விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் சமீபத்தில் தொடங்கினார். இதனால், ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களுடன் சினிமாவிலிருந்து விலக இருப்பதாகவும், முழு நேர மக்கள் பணியில் களமிறங்க இருப்பதாகவும் அறிவித்தார்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கியது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அவரை இனி சினிமாவில் பார்க்க முடியாது என்பது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா; என்ன அவசியம் இருக்கு..? கொந்தளித்த பெற்றோர்!

பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா; என்ன அவசியம் இருக்கு..? கொந்தளித்த பெற்றோர்!

சஞ்சீவ் 

இந்நிலையில் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் "நான் அவன் நண்பர் என்று சொல்வதை விடவும் அவனின் தீவிரமான ரசிகன். அதனால் அவன் சினிமாவை விட்டு விலகுவதை என்னால் ஏற்றுக் கொள்வதற்கு கஷ்டமாக இருக்கிறது.

சினிமால இருந்து விலகுறியா? விஜய் சொன்ன அந்த வார்த்தை - சஞ்சீவ் பகிர்ந்த ரகசியம்! | Actor Vijay Quit Cinema Friend Sanjeev Emotional

இது பற்றி விஜய்யிடம் கேட்டேன். நீ சினிமாவை விட்டு விலகப் போவதாக சொல்கிறார்களே என்று கேட்டதும், "கேள்விப்பட்டியா? அப்போ அதுதான் உண்மை" என்று சொல்லிவிட்டான்.

ஆனால், மக்கள் இதை எந்த மாதிரி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. மக்களின் கேள்விகளுக்கு விஜய்யின் பதில் விரைவில் வரும்" என்று தெரிவித்துள்ளார்.