Thursday, Jul 10, 2025

விஜய்க்கு மட்டும் ஆஸ்கார் விருது கிடைத்தால் அது தமிழுக்கே பெருமைதான்... - பிரபல தயாரிப்பாளர் புகழாரம்

Vijay
By Nandhini 3 years ago
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று அந்தஸ்த்தை பெற்றுள்ளார் நடிகர் விஜய்.

கடந்த 13-ம் தேதி, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். அபர்ணா தாஸ், செல்வராகவன்,கிங்ஸ்லி, யோகி பாபு என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் மாபெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால், இப்படம் மக்களால் வரவேற்பை பெறவில்லை.

இப்படத்திற்கு மிகுந்த விமர்சங்களை மட்டுமே பெற்றது.ஆனால், விஜய் என்ற ஒற்றை மனிதருக்குத்தான் இப்படம் இந்த அளவிற்கு வசூலில் சாதனைப் படைத்துள்ளது.

இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 50 கோடி வசூலை கடந்தது. 2ம் நாள் 100 கோடி வசூலை கடந்தது. 5 நாட்களில் ரூ.200 கோடி வசூலை கடந்து மாபெரும் சாதனை படைத்தது. மக்கள் இயக்குநர் நெல்சனைத்தான் தாக்கி விமர்சனம் செய்தார்களே தவிர, விஜய்யின் நடிப்பை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய்க்கு ஆஸ்கார் விருது கிடைத்தால் அது தமிழுக்கே பெருமை என்று பிரபல தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், விஜய் உழைப்பு மேல நம்பிக்கை இருக்கு. அவர் படம் நல்லா இல்லாவிட்டாலும் மக்கள் ரசிக்கிறார்கள். ஆஸ்கருக்கு போகக்கூடிய அளவுக்கு அவருக்கு திறமை இருக்கிறது. விஜய்க்கு மட்டும் ஆஸ்கார் விருது கிடைத்தால் அது தமிழுக்கே பெருமைதான் என்று தெரிவித்துள்ளார். 

விஜய்க்கு மட்டும் ஆஸ்கார் விருது கிடைத்தால் அது தமிழுக்கே பெருமைதான்... - பிரபல தயாரிப்பாளர் புகழாரம் | Actor Vijay Producer Abhirami Ramanathan