விஜய் நல்லது தானே சொல்லியிருக்கிறார் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin DMK
By Irumporai Jun 17, 2023 09:19 AM GMT
Report

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என நடிகர் விஜய்-ன் பேச்சு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் மாணவர்கள் சந்திப்பு

சென்னை நீலக்கரையில் நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெட்ரா மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த கல்வி விருது வழங்கும் விளைவில் பேசிய நடிகர் விஜய், கல்விதான் ஒருவரின் பறிக்க முடியாத சொத்து என்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களை சக மாணவர்கள் ஊக்குவிக்க வேண்டும் எனவும் கூறினார்.

தனிப்பட்ட அடையாளத்தை எக்காரணம் கொண்டும் விட்டு கொடுக்காதீர்கள் என்றும் அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.

விஜய் நல்லது தானே சொல்லியிருக்கிறார் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் | Actor Vijay Minister Udayanidhi Stalin

உதயநிதி கருத்து 

குறிப்பாக, வரும் களங்களில் நல்ல தலைவர்களை தேர்வு செய்யுங்கள் என்றும் உங்கள் பெற்றோரிடம் காசு வாங்கி கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று சொல்லுங்கள் என மாணவர்களிடையே நடிகர் விஜய் பேசினார்.

நடிகர் விஜயின் செயல் மற்றும் அவரது பேச்சு குறித்தும் தற்போது பேசப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், நடிகர் விஜய் நல்லதுதானே சொல்லியிருக்கிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்-ன் பேச்சு குறித்து செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், வாக்கிற்கு பணம் வாங்க வேண்டாம் என நடிகர் விஜய் நல்லதுதானே சொல்லியிருக்கிறார்.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் யார் வரவேண்டும், வரவேண்டாம் என கூற யாருக்கும் உரிமையில்லை எனவும் கூறியுள்ளார்.