முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நடிகர் விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர் விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் 66வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில், இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும், இசையமைப்பாளராக தமனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இதன் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாயின.
இதனிடையே ஏஜிஎஸ் நிறுவனம் கல்பாத்தி அகோரம் மகள் ஜஸ்வர்யா - பிரபல தொழில் அதிபரின் மகனுமான ராகுல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
இதில் நடிகர் விஜய்யும் கலந்துக் கொண்டார். அப்போது மேடை ஏறி மணமக்களை வாழ்த்தி விட்டு திரும்பிய போது அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார். மேடையில் இருவரும் புன்னகையுடன் கை கொடுத்து வணக்கத்தை தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வின் போது நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். இதன் புகைப்படம் தற்போது ட்ரெண்டாகியுள்ளது.