என்னது... என் மகளுக்கும், விஜய்க்கும் நெருக்கமா...? - பிரபல நடிகையின் தாய் ஆவேசம்...!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
கடந்த 11ம் தேதி ‘வாரிசு’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையிலும் முன்னிலையில் உள்ளது.
விஜய்யுடன் நெருக்கமான உறவு...?
இந்நிலையில், சமீப காலமாக நடிகர் விஜய்யும், நடிகை கீர்த்தி சுரேஷும் நெருக்கமான உறவு இருப்பதாக சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.
நடிகர் விஜய் தனது மனைவியான சங்கீதாவை விவாகரத்து செய்து விட்டு கீர்த்தி சுரேஷைதான் திருமணம் செய்யப்போகிறார் என்று தகவல் தீயாய் பரவி வருகிறது.
நடிகை கீர்த்தி பள்ளியில் படிக்கும் போதிலிருந்து ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியானது.

கீர்த்தி சுரேஷ் அம்மா ஆவேசம்
இது தொடர்பாக நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா இந்த வதந்திக்கு விளக்கம் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
இது 'முழுக்க முழுக்கப் பொய்யான தகவல். பரபரப்புக்காகக் கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்த மாதிரி வெளியாகிற எந்தச் செய்தியையும் பார்க்கக் கூட எங்களுக்கு விருப்பம் கிடையாது. கீர்த்தியின் திருமணம் தொடர்பான சோஷியல் மீடியா தீனிக்கு எங்களுடைய பதில் இதுதான். மேற்கொண்டு இது தொடர்பாக பேசுவதற்கு எதுவும் கிடையாது என்றார்.
இஸ்ரேலுக்கு பலத்த அடி கொடுத்த நெதர்லாந்து! சட்டவிரோதக் குடியேற்றப் பொருட்களுக்கு அதிரடித் தடை IBC Tamil