விஜய்யுடன் நெருக்கம் காட்டும் பிரபல நடிகை..? - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த குடும்பத்தினர்...! ரசிகர்கள் ஷாக்..!

Vijay Keerthy Suresh
By Nandhini 1 வாரம் முன்

‘வாரிசு’ படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் நடிப்பில் வெளியாகும் படங்களின் முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அவை யூ-டியூப்பில் பெரிய சாதனையைப் படைத்து விடும்.

இவர் பாடலுக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 11ம் தேதி வாரிசு திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையிலும் முன்னிலையில் உள்ளது.

விஜய்யுடன் நெருக்கமான உறவு...?

நடிகர் விஜய்யும், நடிகை கீர்த்தி சுரேஷும் நெருக்கமான உறவு இருப்பதாக சமூகவலைத்தளங்களில் சில நாட்களாக வதந்திகள் பரவி வருகிறது. நடிகையான கீர்த்தி சுரேஷும், நடிகர் விஜய்யும் ‘பைரவா’, ‘சர்க்கார்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர்.

நடிகர் விஜய் தனது மனைவியான சங்கீதாவை விவாகரத்து செய்து விட்டு கீர்த்தி சுரேஷைதான் திருமணம் செய்யப்போகிறார் என்று தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

actor-vijay-keerthy-suresh

முற்றுப்புள்ளி வைத்த குடும்பத்தினர்

இந்நிலையில், தற்போது வைரலாகும் இந்த வதந்திகளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

இது குறித்து கீர்த்தி சுரேஷின் குடும்பத்தினர் கூறுகையில், நடிகை கீர்த்தி பள்ளியில் படிக்கும் போதிலிருந்து ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளனர்.

கீர்த்தி காதலிக்கும் நபர் கேரளாவில் ரிஷார்ட் வைப்பதாகவும், அவர்களது திருமணத்தை எங்கள் இருவர் குடும்பமும் சேர்ந்துதான் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கீர்த்தி, தன்னுடைய காதலரை, விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். காதலரின் பிறந்த நாளன்று விஜய்யும் வந்துள்ளார். இவர்களது திருமணத்தை 4 வருடங்கள் கழித்து நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.