நடிகர் விஜய்யை தொடர்ந்து லீக்கான மகன் சஞ்சய் வீடியோ - வாயடைத்த ரசிகர்கள்...!

Vijay Tamil Cinema Viral Video jason sanjay
By Nandhini Jan 27, 2023 11:36 AM GMT
Report

‘வாரிசு’ படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் நடிப்பில் வெளியாகும் படங்களின் முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அவை யூ-டியூப்பில் பெரிய சாதனையைப் படைத்து விடும்.

இவர் பாடலுக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 11ம் தேதி வாரிசு திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையிலும் முன்னிலையில் உள்ளது.

actor-vijay-jason-sanjay-viral-video

மகன் சஞ்சய் வீடியோ வைரல்

நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்தார் திவ்யா சாஷா. ஆனால், சஞ்சய்க்கு அப்பா போல் நடிக்க ஆசை கிடையாதாம். தாத்தா போல் படத்தை இயக்கத்தான் ஆசையாம்.

இதற்காக அவர் படங்களை இயக்குவது குறித்து வெளிநாட்டில் படித்துள்ளார். சஞ்சய் குறும்படங்களை இயக்கி வருகிறாராம். தற்போது அவர் இயக்கிய ஆங்கில குறும்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த விஜய் ரசிகர்கள் எங்கள் குட்டி தளபதி இயக்குநராகப் போகிறார் என்று மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.