அரசியலுக்கு தயாராகும் விஜய் - தொகுதி விவரங்கள் சேகரிக்க பறந்த உத்தரவு!
சட்டமன்ற தொகுதிவாரியாக அரசியல் விவரங்களை நடிகர் விஜய் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்
நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு நலத் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் மக்கள் இயக்கம் சார்பில் மரியாதை செலுத்தவும் விஜய் தரப்பில் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் தொகுதி வாரியாக அரசியல் விவரங்களை நடிகர் விஜய் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.தங்களது சட்டமன்ற தொகுதியில் உள்ள முக்கிய அரசியல் மற்றும் தொழிலதிபர்களின் விவரங்கள், வாக்காளர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார்.
அரசியல்
கடந்த 5 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர்கள் பட்டியல், மொத்த வார்டு எண்ணிக்கை, பூத் வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனரா என்பது உள்ளிட்ட தகவல்களையும் கேட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்று கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.