நடிகர் விஜய் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு - ரசிகர்கள் அதிர்ச்சி
Vijay
Tamil Cinema
Tamil Nadu Police
By Thahir
நடிகர் விஜய் காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக அவருக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
கடந்த 20ம் தேதி பனையூரில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது ஆலோசனையில் பங்கேற்பதற்காக தனது இனோவா காரில் வந்தார். அவரை நிர்வாகிகள் வரவேற்றனர்.
இந்த நிலையில் அவர் வந்த காரில் விதிகளை மீறி கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதாக கூறி அவர் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் நடிகர் விஜய்க்கு போக்குவரத்து காவல்துறையினர் ரூ.1000 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.