அன்று அக்கவுண்டில் ரூ.500 கூட இல்லை.. இன்று தியேட்டர் ஓனர் - விஜய் தேவரகொண்டாவின் அசுர வளர்ச்சி

actorvijaydeverakonda multiplexcinemas Asian Vijay Deverakonda cinemas
By Petchi Avudaiappan Sep 21, 2021 11:26 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

 நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ஆரம்ப கால வாழ்க்கையின் சில சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

ரவி பாபு இயக்கத்தில் தெலுங்கில் 2011 ஆம் ஆண்டு வெளியான நுவ்விலா படம் மூலம் நடிகரான விஜய் தேவரகொண்டா வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் மிகப்பெரியளவில் பிரபலமானார். தொடர்ந்து கீதா கோவிந்தம், டாக்சிவாலா, நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.

இந்நிலையில் அவர் ஹைதராபாத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டரை திறக்கவிருக்கிறார். இது குறித்து விஜய் தேவரகொண்டா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நடிகராக வேண்டும் என்று கனவு கண்டதில் இருந்து இன்று மல்டிபிளக்ஸ் சினிமா சொந்தக்காரர் ஆகியிருக்கிறேன்.

ஏசியன் விஜய் தேவரகொண்டா சினிமாஸ். முதல் தியேட்டர் செப்டம்பர் 24ம் தேதி மெஹ்பூப்நகரில் திறக்கப்படும்” என தெரிவித்துள்ளார். அவரது முந்தைய பேட்டி ஒன்றில் 25 வயதாக இருக்கும் போது தனது ஆந்திரா வங்கி கணக்கில் குறைந்தபட்ச பேலன்ஸ் 500 ரூபாய் இல்லாததால் என் கணக்கை முடக்கினார்கள்.

30 வயதுக்குள் செட்டிலாகிவிடு என அப்போது என் அப்பா அறிவுரை வழங்கினார். 4 ஆண்டுகள் கழித்து ஃபோர்ப்ஸ் 100 பிரபலங்கள், ஃபோர்ப்ஸ் 30 வயதுக்குட்பட்ட 30 பிரபலங்கள் பட்டியலில் நான் இடம்பிடித்தேன் என பழைய நினைவுகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.