சிக்ஸ்.. சிக்ஸ்.. நீயடிச்சா மட்டும்..? கிரிக்கெட் களத்தில் சண்டை போடும் விஜய் - வைரல் Video!

Vijay Tamil Cinema Viral Video Actors Tamil Actors
By Jiyath Jan 10, 2024 07:53 AM GMT
Report

நடிகர் விஜய் கிரிக்கெட் களத்தில் சிக்ஸ் கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் 'GOAT' படத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சிக்ஸ்.. சிக்ஸ்.. நீயடிச்சா மட்டும்..? கிரிக்கெட் களத்தில் சண்டை போடும் விஜய் - வைரல் Video! | Actor Vijay Cute Fighting On The Cricket Match

மேலும், சினேகா, மீனாக்ஷி சௌத்ரி, பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. சமீபத்தில் GOAT படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

வைரலாகும் வீடியோ  

இந்நிலையில் வாரிசு படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் கிரிக்கெட் களத்தில் சிக்ஸ் கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிக்ஸ்.. சிக்ஸ்.. நீயடிச்சா மட்டும்..? கிரிக்கெட் களத்தில் சண்டை போடும் விஜய் - வைரல் Video! | Actor Vijay Cute Fighting On The Cricket Match

படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடிய விஜய், பாடலாசிரியர் விவேக் அடித்த சிக்ஸரை பவுண்டரி என எதிர் அணியினர் சொன்னதுமே, நீயும் அதே இடத்துல தான் அடிச்சு சிக்ஸர்ன்னு சொன்ன, இதுவும் சிக்ஸர் தான் என சொல்லி சண்டை போடுகிறார். இந்த வீடியோவை பாடலாசிரியர் விவேக் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.