சிறு வயதில் நடிகர் விஜய்யின் மடியில் அமர்ந்து சாப்பிட்ட புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த தம்பி!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தன் அண்ணன் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து அவர்களது சிறிய வயது போட்டோவை சேர்த்து நடிகர் விக்ராந்த் சந்தோஷ் ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் விஜய் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் தளபதி விஜய், ஹேப்பி பர்த்டே தளபதி ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் தேசிய அளவில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தன் அண்ணன் விஜய்க்கு ட்விட்டரில் நடிகர் விக்ராந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தான் சிறுவனாக இருந்த போது விஜய் மடியில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள், அளவில்லா மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.
Happy birthday @actorvijay anna.. wishing u only the best??#HappyBirthdayThalapathy #beast pic.twitter.com/bGAt5H7buN
— Vikranth Santhosh (@vikranth_offl) June 22, 2021