புதிய வீடு வாங்கிய நடிகர் விஜய்...எத்தனை கோடி தெரியுமா?
நடிகர் விஜய் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுகம் - ரசிகர் பட்டாளம்
இளைய தளபதி என்று எல்லோரும் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவர் தமிழர்களின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
நாளைய தீர்ப்பு என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் விஜய் ஏராளமான தமிழ் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
பல படங்களில் நடித்து வரும் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
புதிய வீடு
இந்த நிலையில் நடிகர் விஜய் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்று வாங்கியுள்ளதாக தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது.
நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
நடிகர் விஜயின் பெரிய அலுவலகம் ஒன்று சென்னை அடையாரில் உள்ளது.
இதனிடையே சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் விஜய் 35 கோடி கொடுத்து ஒரு வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகவும், அதை அவர் அலுவலகமாக பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.