நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்- நிபுணர்கள் சோதனை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்துவருபவர் நடிகர் விஜய்.
அவர் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
அவருடைய படங்கள் வெளிவரும்போது அவரைச் சுற்றி சர்ச்சைகள் உருவாவது வழக்கமான ஒன்றாகவே இருந்துவருகிறது.
அரசியல் ஆர்வம் கொண்ட விஜய் அவரது படங்களின் பாடல் வெளியீட்டு மேடையில் பேசும் விவகாரங்கள் முக்கிய விவாதத்தை ஏற்படுத்தும். சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவர் சைக்கிளின் சென்றது தலைப்புச் செய்தியானது.
அதனையடுத்து, தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு கனிசமான வெற்றியைப் பெற்றனர்.
வெற்றிப் பெற்றவர்களை அழைத்து சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் விஜய்.
இந்தநிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது.
தகவல் அறிந்த சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு பின் அது புரளி என தெரியவந்தது.
மிரட்டல் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை செய்த நீலாங்கரைக்கு போலீசார்க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவணேஸ்வரன் என்பது தெரியவந்தது.
புவணேஸ்வர் வழக்கமாக வெடிகுண்டு விடுப்பவர் என்றும் இவர் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடதக்கது