சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 9 மணி நிலவரப்படி 13% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மூத்த அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் எனப் பலரும் காலை முதலே வாக்களித்த வண்ணம் உள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் ஆகியோர் தங்களுடைய வாக்குகளை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் நீலாங்கரையில் தற்போது தன்னுடைய வாக்கை செலுத்தியுள்ளார். நீலாங்கரையில் உள்ள தன்னுடைய வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Vijay arrives in cycle to cast his vote #TamilNaduElections pic.twitter.com/iKY4bkIqA8
— BARaju (@baraju_SuperHit) April 6, 2021
நடிகர் விஜய்யின் இந்த செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வை சுட்டிக்காட்டும் விதத்தில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்துள்ளாரா என அவருடைய ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.