‘பீஸ்ட்’ படத்தின் ஒரு முக்கிய புகைப்படம் கசிந்ததால் பெரும் பரபரப்பு - நடந்தது என்ன?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை ‘தளபதி’ என்று அவரது ரசிகர்கள் விஜய்யை அன்போடு அழைக்கிறார்கள்.
வயசு ஆக.. ஆக... இளமை குறையும் என்று சொல்வார்கள்.. ஆனால், நடிகர் விஜய் பொருத்தவரை வயசு ஆக.. ஆக.. தான் அவருடைய அழகு இன்னும் கூடிக்கொண்டே போகிறது.
இவர் தற்போது ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படம் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில், அனிருத் இசையில் இப்படத்திலிருந்து ‘அரபிக் குத்து’ பாடல் வெளியானது. இப்பாடல் வெளியான சில நொடிகளிலேயே பல லட்சம் கடந்து லைக்குகள் அள்ளி குவித்தன.
பட்டித்தொட்டியெங்கும் இப்பாடல் மெஹா ஹிட்டடித்துள்ளது. இந்நிலையில், இப்படத்திலிருந்து ஒரு முக்கிய புகைப்படம் கசிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஃபோனில் பேசிக்கொண்டிருக்க பின்னணியில் குதிரைகள் மேயந்தபடி இருக்கும் இப்படத்தின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியதால் இந்த புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.