என்னது... விஜய்யின் ‘ஜாலியா ஜிம்கானா’ பாட்டு காப்பியா? பங்கமாய் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Movie Actor vijay song Beast விஜய் நடிகர் Jolly ah irunga Nanba ஜாலியா ஜிம்கானா பாட்டு
By Nandhini Mar 17, 2022 09:29 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

தற்போது நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது.

கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு, 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற "ஹலமித்தி ஹபிபோ" பாடல் வெளியானது.

வெளியிட்ட கொஞ்ச நேரத்துல பாட்டு செம்ம ஹிட்... யார் பார்த்தாலும் இந்த பாட்டைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்தப் பாட்டு பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது.

நடிகர் விஜய்யின் மாஸான நடனமும், அனிருத்தின் அசத்தலான இசையும் இப்பாடலுக்கு பலத்தை சேர்த்துள்ளது. யூட்யூப்பில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து இப்பாடல் சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் 2-வது பாடல் வரும் 19ம் தேதி வெளியாக உள்ளது. இப்பாடலின் ப்ரோமோவை நேற்று படக்குழு வெளியிட்டனர். ‘ஜாலியா ஜிம்கானா...’ என்று தொடங்கும் இப்பாடலில் விஜய்யுடன் நெல்சன், அனிருத் ஆகியோர் இணைந்து ஆடியுள்ளனர்.

வெளியான சிறிது நேரத்திலேயே மிகவும் ஹிட்டான இந்த ப்ரொமோ, தற்போது சில விமர்சனத்திலும் சிக்கியுள்ளது. ‘ஜாலியா ஜிம்கானா’ பாடல் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம் பெற்ற ‘பீலா பீலா’ பாடலை போல உள்ளது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

‘பீலா பீலா’அப்பாடலையும், அனிருத் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.