விஜய் - அட்லி திடீர் சந்திப்பு... - புகைப்படம் வைரல்
இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. நடிகர் விஜய், பூஜா ஹெக்டே தான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துள்ளனர்.
பீஸ்ட் படத்தை ஏப்ரல் மாதம் திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
இந்நிலையில் அட்லி - விஜய் - லோகேஷ் கனகராஜ் - நெல்சன் திலீப்குமார் சந்தித்துள்ள புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்திருக்கிறார். மேலும், அந்த புகைப்படத்தை விஜய் எடுத்ததாகவும் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.