அடுத்தது என்ன நடக்கும்? வலிகளுடன் வாழப் பழகிக்கொண்டேன் - விஜய் ஆண்டனி உருக்கம்!
விஜய் ஆண்டனி
தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. முதன் முதல் 'சுக்ரன்' என்ற படத்தின் மூல தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடித் தெரு,உத்தம புத்திரன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார். அதுமட்டுமல்லாமல் நடிகராகவும் களமிறங்கி நான், காளி, பிச்சைக்காரன், சைத்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2006ம் ஆண்டு 'பாத்திமா' என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீரா, லாரா என்ற இரு மகள்கள் இருந்தனர். அதில் மூத்த மகள் மீரா அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உருக்கமான பேட்டி
தற்போது விஜய் ஆண்டனி 'ரத்தம்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற அக்டோபர் 6ம் தேதி படம் வெளியாக உள்ளது. இதற்காக தனக்குள் இருக்கும் வலிகளை மறைத்துக்கொண்டு படத்தின் புரொமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் விஜய் ஆண்டனி.
அவர் கலந்துகொண்ட நேர்காணலில் பேசியிருப்பதாவது " "வாழ்க்கையில் அடுத்தது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. என் வாழ்வில் நிறைய இழப்புகளை அனுபவித்து விட்டேன். இப்போது, வலிகளுடன் வாழப் பழகிக்கொண்டேன். நான் பெரிய தத்துவவாதி இல்லை. ஆனால், இழப்புகளின் மூலம் நிறையக் கற்றுக்கொண்டேன்” என விஜய் ஆண்டனி உருக்கமாகக் கூறியுள்ளார்.