ஓட்டுக்கு பணம் வாங்குவதில் தப்பில்ல.. வாங்கிட்டு இத பண்ணுங்க - விஜய் ஆண்டனி அட்வைஸ்!

Tamil Cinema Vijay Antony Tamil nadu Tamil Actors Lok Sabha Election 2024
By Jiyath Apr 08, 2024 07:41 AM GMT
Report

ஓட்டுக்கு பணம் வாங்குவது குறித்து நடிகர் விஜய் ஆண்டனி பேசியுள்ளார். 

விஜய் ஆண்டனி 

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ள படம் ‘ரோமியோ'. இந்த படம் வரும் 11-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ஆகியோர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

ஓட்டுக்கு பணம் வாங்குவதில் தப்பில்ல.. வாங்கிட்டு இத பண்ணுங்க - விஜய் ஆண்டனி அட்வைஸ்! | Actor Vijay Antony About Politics

அப்போது நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் தொடர்பாக, விஜய் ஆன்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "சினிமாவில் சின்ன வயதிலிருந்தே அவர் நடிக்கிறார்.

17 வயதிலிருந்தே ஒரே வேலையை பார்க்கிறார். அதில் உச்சமும் தொட்டுவிட்டார். அதனால் அன்பு கொடுத்த மக்களுக்கு ஏதாவது திருப்பி கொடுக்க போகிறார். அது வரவேற்கத்தக்கது தான்” என்றார்.

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

வாய்ப்பிருக்கிறது

மேலும், பேசிய விஜய் ஆண்டனி "அரசியலுக்கு எல்லாரும் வர வேண்டும். இப்போது எனக்கு நடிப்பிலே நேரம் போய்கொண்டிருக்கு. எதிர்காலத்தில் ஒரு வேளை, மக்களுக்கு ஏதாவது பண்ண வேண்டும் என நினைத்தால் வாய்ப்பிருக்கிறது.

ஓட்டுக்கு பணம் வாங்குவதில் தப்பில்ல.. வாங்கிட்டு இத பண்ணுங்க - விஜய் ஆண்டனி அட்வைஸ்! | Actor Vijay Antony About Politics

ஓட்டுக்கு காசு வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஆனால் ரொம்ப வறுமை, அடுத்த வேலைக்கு சாப்பாடு இல்லை, பசங்களுக்கு பள்ளிக்கட்டணம் கூட கட்ட பணமில்லை என்ற சூழலில், காசு வாங்கிக்கலாம்.

நம்ம பணத்தை திருப்பி தராங்க. ஆனால் ஓட்டு போடும் போது மட்டும் காசு கொடுத்தவங்களுக்கு போடனும் என்று நினைக்கக் கூடாது. வாங்குவதில் ஒன்னும் தப்பில்லை. வாங்கிவிட்டு சரியான மனிதர்களுக்கு ஓட்டு போடலாம்” என்று தெரிவித்துள்ளார்.