நடிகை அசினின் பெண்கள் தொடர்பான கேள்வி - நடிகர் விஜய் கொடுத்த தக்க பதிலடி!

Jiyath
in பிரபலங்கள்Report this article
நடிகர் விஜய் மற்றும் நடிகை அசின் ஆகியோர் கலந்து கொண்ட நேர்காணல் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு.
விஜய்-அசின்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பெரும் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
இதுவரை சுமார் 600 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்துள்ளது. அண்மையில் லியோ படத்தின் வெற்றி விழாவும் சென்னையில் நடந்தது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் நடிகை அசின் கலந்து கொண்ட நேர்காணலில் நடந்த நிகழ்வு ஒன்று வைரலாகி வருகிறது. இருவரும் இதுவரை சிவகாசி, போக்கிரி, காவலன் ஆகிய 3 படங்களில் இனைந்து நடித்துள்ளனர்.
விஜய் பதிலடி
இதில் போக்கிரி படத்தின் போது விஜய் மற்றும் அசின் இருவரும் இனைந்து பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தனர். அப்போது அசின் விஜய்யிடம் "பொண்ணுங்க இருக்காங்கல்ல.. அவர்களைப் பற்றி நீங்கள் ஒரு விஷயத்தை மாற்ற விரும்பினால்.. அது என்னவாக இருக்கும்? என்று ஆங்கிலத்தில் கேட்பார்.
பின்னர் அசின் தொகுப்பாளரை பார்த்து "இதை கொஞ்சம் விஜய்க்கு தமிழில் சொல்லுங்க" என்று கூறுவார். உடனே விஜய் "எனக்கென்ன இங்கிலீஷ் புரியாதா? என்று பதிலடி கொடுத்திருப்பார். அப்போது அசினும், தொகுப்பாளரும் வாய்விட்டு சிரிப்பார்கள்.