நடிகர் விஜய் பயந்துவிட்டார் - பிரபல தயாரிப்பாளர் பேச்சால் வெடித்த சர்ச்சை

Vijay issue byte K. Rajan
By Anupriyamkumaresan Sep 24, 2021 10:10 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

 நடிகர் விஜய் பயந்துவிட்டதாக பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ருத்ரன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ரூ.2000 படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நடிகர் விஜய் பயந்துவிட்டார் - பிரபல தயாரிப்பாளர் பேச்சால் வெடித்த சர்ச்சை | Actor Vijay Afraid Producer Byte Issue

இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்து கொண்டு பேசினார், அப்போது மணல் கொள்ளை, ஆணவ கொலையை எதிர்த்து படம் எடுத்தால் அந்த படத்துக்கு சென்சாரில் பிரச்சனை வருவது இயல்பான ஒன்றுதான் என்றும் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக சிறிய விமர்சனத்தை முன்வைத்ததால் நடிகர் விஜய்க்கு 12 மணி நேரம் மன உளைச்சல் கொடுத்து விட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும், பேசிய அவர், அந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் விமர்சனமே செய்வதில்லை என்றும் அவர் பயந்து போய்விட்டதாகவும் தெரிவித்தார்.