மீண்டும் நடிக்கும் விஜய்?
நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் என கூறப்பட்டது.
இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஆனதால் படம் வெளியீடு தள்ளிப்போனது.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி இணையத்தில் முழு படமும் வெளியான நிலையில் சைபர் க்ரைம் பிரிவு பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது இந்த விவகாரத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே படம் வெளியானதால் தயாரிப்பு நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில் விஜய் மீண்டும் திரைப்படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.
இப்படத்தை அட்லி, லோகேஷ் கனகராஜ் அல்லது நெல்சன் இயக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
வளைகுடாவில் வெடித்த போர்: நிறுத்த சொல்லும் வரை ஈரானை தாக்குங்கள் - டிரம்பின் உத்தரவால் பதற்றம் IBC Tamil