நடிகர் விஜய் குறித்து பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் அளித்த ஒரு வரி பதில்! ரசிகர்கள் உற்சாகம்!

actor vijay sharukhan
By Anupriyamkumaresan Jun 25, 2021 09:28 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

நடிகர் விஜய் பற்றி ரசிகர் கேட்ட கேள்விக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு வார்த்தையில் அளித்த பதில் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாலிவுட் ’பாட்சா’ என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ‘தீவானா’ படத்தின் மூலம்தான் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார்.

நடிகர் விஜய் குறித்து பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் அளித்த ஒரு வரி பதில்! ரசிகர்கள் உற்சாகம்! | Actor Vijay About Sharukhan Answer Very Cool

இப்படம், இதே ஜூன் 25 ஆம் தேதிதான் வெளியானது. படம் வெளியாகி 29 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இன்று ஷாருக்கான் ரசிகர்களுடன் ட்விட்டரில் கேள்வி பதில் மூலம் உரையாடினார்.

அப்போது, விஜய் ரசிகர் ஒருவர் விஜய்யின் ‘பீஸ்ட்’ செகெண்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து ’விஜய் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்’ என கேள்வி எழுப்பியுள்ளார்..

அதற்கு, ஷாருக்கான் உடனடியாக ‘வெரி கூல்’ என்று பதிலளித்துள்ளார். விஜய் ரசிகரின் இந்த கேள்விக்கான, பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. .