அண்ணன் விஜயகாந்த் தம்பி நான்; அவராலதான் ரசிகர்களுக்கு.. - நடிகர் விஜய் நெகிழ்ச்சி!
செந்தூரப்பாண்டி படம் குறித்து நடிகர் விஜய் பேசிய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
விஜயகாந்த்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

அந்தவகையில் நடிகர் விஜய்யும் நேரில் சென்று கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் விஜய் இனைந்து நடித்த செந்தூரப்பாண்டி படம் குறித்து, விஜய் பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்
அதில் அவர் பேசியதாவது "கிளாஸ் ஆடியன்ஸ், மாஸ் ஆடியன்ஸ்னு இரண்டு பேர் இருக்காங்க. அதில் மாஸ் ஆடியன்ஸ் இருக்காங்கல்ல, அவங்க நடிகன நடிகனா ஒத்துக்கணும்.

அது ரொம்ப முக்கியம். அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி ஒரு பெரிய ஹீரோன்னா அது அண்ணன் விஜயகாந்த் தான். அவர வச்சு எங்க அப்பா செந்தூரப்பாண்டி படம் பண்ணொரு.
அதில் அவருக்கு தம்பியாக நான் பண்ணேன். அவர் மூலமாக நான் ரசிகர்களுக்கு அறிமுகமாகுறேன். அந்த படம் வெற்றியும் அடைஞ்சது" என்று விஜய் பேசியுள்ளார்.
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil