தளபதி 66 படத்தை இயக்கும் இயக்குநர் இவர்தான் - வெளியான அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்

Vijay release update thalapathy 66 Indian actor
By Anupriyamkumaresan Sep 26, 2021 11:45 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

நடிகர் விஜய்யின் 66-ஆவது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கப்போகிறார் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இதுதொடர்பான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் டுவிட்டர் பக்கத்தில், “அதிகாரப்பூர்வமாக்க நாங்கள் காத்திருந்த செய்தி.

தளபதி 66 படத்தை இயக்கும் இயக்குநர் இவர்தான் - வெளியான அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் | Actor Vijay 66 Movie Update Released

எங்களுக்கு மிகவும் பெருமையான தருணம். தளபதியுடன் மதிப்புமிக்க தளபதி 66-ஆவது படத்தை தயாரிப்போம் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி” எனப் பதிவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் வம்சி தனது டுவிட்டர் பக்கத்தில், நடிகர் விஜய்யின் 'தளபதி 66’ படம் எனது அடுத்த படம் என்ற தகவலை உங்களுடன் பகிர்கிறேன். இந்த படத்தை தில்ராஜு, ஹிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர்’ எனப் பதிவிட்டுள்ளார்.