நடிகர் விஜய்யின் 65வது படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? - பேர கேட்டாலே மாஸ்தான்!
தளபதியின் 65வது படத்தின் பெயர் டார்கெட் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய்யின் 65வது படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். தளபதியின் இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர்.
இதுவரை படத்திற்கு பெயர் வைக்காமல் இருந்த நிலையில், தற்போது படத்திற்கு டார்கெட் என பெயர் வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் படக்குழு இன்னும் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. விஜய்யின் பிறந்த நாளுக்கு முதல் நாளான வரும் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.