தளபதி 65 படத்தின் புதிய அப்டேட் - உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
                    
                actor
            
                    
                update
            
                    
                vijay
            
                    
                65th movie
            
            
        
            
                
                By Anupriyamkumaresan
            
            
                
                
            
        
    தளபதியின் 65வது படத்தின் பெயர் டார்கெட் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய்யின் 65வது படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். தளபதியின் இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர்.

இதுவரை படத்திற்கு பெயர் வைக்காமல் இருந்த நிலையில், தற்போது படத்திற்கு டார்கெட் என பெயர் வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் படக்குழு இன்னும் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. வரும் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள் அன்று இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
