மெயின் வில்லன்.. வடிவேலு மாதிரி வீட்டில் சும்மா இக்கால - நடிகர் வையாபுரி பளீச்!
லியோ திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகர் வையாபுரி பேசியுள்ளார்.
நடிகர் வையாபுரி
உடன்பிறப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் வையாபுரி. இதுவரை கருத்தம்மா, அவ்வை சண்முகி, காதலா காதலா, சூர்யவம்சம், அமர்க்களம், தலைக்கூத்தல், கிக், சரக்கு உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் நிகழ்சசியிலும் பங்கேற்றிருந்தார். மேலும், சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் ஒரு சிறிய நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் பெரிய அளவிற்கு பேசப்பட்டது.
மெயின் வில்லன்
நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட வையாபுரி, "லியோ படத்தில் நடிக்கும் போது எல்லாம் என்னுடைய ரோலுக்கு எந்தளவு முக்கியத்துவம் இருக்கும் என நிஜமாவே தெரியல. படம் ரிலீஸ் ஆன பிறகு இவன் தாண்டா மெயின் வில்லன் என பலரும் மீம் போடும் போது தான் புரிந்து கொண்டேன்.
வடிவேலு, விவேக், தாமு, மயில்சாமி என பலருடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்துள்ளேன். ஒரு வருடத்தில் 18 படமெல்லாம் நடித்திருக்கிறேன். பெரிய அளவு வளரவில்லை என்கிற ஏக்கமும் இல்லை. அதே நேரத்தில் வடிவேலுவுக்கு நடந்ததை போல வீட்டில் சில காலம் முடங்கியும் இருக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.