வைகை புயலையும் விட்டு வைக்காத கொரோனா - அதிர்ச்சியில் திரையுலகம்

Corona Vadivelu
By Irumporai Dec 24, 2021 10:20 AM GMT
Report

படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய நிலையில் நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார் .

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் படத்தின் பாடல் கம்போசிங்கிற்காக லண்டன் சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு , வடிவேலு மற்றும் சுராஜ் இருவரும் லண்டனில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

படத்தின் கதை இரண்டு வெவ்வேறு பிண்ணனிகளில் நடப்பது போன்று இருப்பதால் படத்தின் சில காட்சிகளை லண்டனில் படமாக்க சுராஜ் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய நிலையில் நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நடிகர் வடிவேலு கொரோனா சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.