களமிறங்கிய வைகைப்புயல் - படங்களில் நடிக்க தொடங்கிய வடிவேலு: ரசிகர்கள் மகிழ்ச்சி

shooting photos viral actor vadivelu re entry
By Anupriyamkumaresan Sep 02, 2021 04:11 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

நடிகர் வடிவேலு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நடிகர் வடிவேலு, தமிழ் சினிமாவே கொண்டாடிய ஒரு நடிகர்.

இவரது காமெடி இன்னும் பல வருடங்களுக்கு நின்று பேசும் அளவிற்கு தரம் வாய்ந்தது. அந்த அளவிற்கு அவர் தனது படங்களில் காமெடி மூலம் மக்களின் மனதை பெரிதாக கவர்ந்துவிட்டார்.

களமிறங்கிய வைகைப்புயல் - படங்களில் நடிக்க தொடங்கிய வடிவேலு: ரசிகர்கள் மகிழ்ச்சி | Actor Vadivelu Reentry Shooting Images Viral

சமீபகாலமாக சில பிரச்சனைகளால் இவர் நடிக்காமலேயே இருந்தார். இந்த நிலையில், அண்மையில் தயாரிப்பாளர் சங்கம் அவர் மீது இருந்த எல்லா பிரச்சனைகளில் இருந்து விடுவித்தது.

இதன் தொடர்ச்சியாக மீண்டும் அவர் சினிமாவில் வலம் வர தொடங்கிவிட்டார். இந்த நிலையில் அவர் கலந்து கொண்ட படப்பிடிப்பின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மீண்டும் நடிக்க தொடங்கிய அவருடன் ஏராளமானோர் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.