உதயநிதியைச் சந்தித்த வடிவேலு - இதுதான் காரணமா?
நடிகர் வடிவேலு சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கு போடப்பட்டிருந்த ரெட் கார்டு உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்த்து மீண்டும் முழுவீச்சில் நடிகர் வடிவேலு நடிக்க தொடங்கியுள்ளார். முதலாவதாக லைகா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை பகிர்ந்த வடிவேலு பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பின்னர் தான் தனக்கு நல்ல காலம் பிறந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினை வடிவேலு நேற்று சந்தித்து பேசினார். இது நட்பு ரீதியான சந்திப்பு என கூறப்படும் நிலையில் இதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.