கெத்தா, மாஸா அப்படியே திரும்பி வந்த நடிகர் வடிவேலு - நடிகையை ஜாலியாக கலாய்த்த லேட்டஸ்ட் வீடியோ
வடிவேலு தமிழ் சினிமாவின் மிகப்பெரும் காமெடி நட்சத்திரம். இவர் சினிமாவில் நடிக்காமல் இருப்பது பல மீம் கிரியேட்டர்ஸுகளுக்கு வருத்தம் தான். தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் முழு பலத்துடன் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்.
சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் வடிவேலு நடிக்க சம்மதிக்க, அதை தொடர்ந்து பல ரசிகர்களையும், திரைப்பிரபலங்களயும் வடிவேலு சந்தித்து வருகின்றார்.
அந்த விதத்தில் சமீபத்தில் நடிகை மற்றும் சின்னத்திரை தொகுப்பாளர் அகல்யா வெங்கடேஷன் அவர்கள் வடிவேலுவை சந்தித்து, ‘ஒரே முறை என் பெயரை கூறுங்கள்’ என்றார். வடிவேலு தனக்கே உரிய ஸ்டைலில் கலாய்க்கும்படி அவர் பெயரை கூப்பிட்டார், அந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.