ஓராண்டாகியும் மாறாத சுஷாந்த் மரணத்தின் மர்மம்...இன்று முதலாமாண்டு நினைவு தினம்

கடந்த ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

எந்த பின்னணியும் இல்லாமல் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து உலக அளவில் புகழ் பெற்றார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் இருக்கும் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதான அவரின் மரணம் தற்கொலை அல்ல கொலை என பலரும் சந்தேகத்தை கிளப்பி வரும் நிலையில் இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

சுஷாந்த் இறந்த பிறகு பாலிவுட்டில் போதைப் பொருள் பயன்படுத்தும் பலரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், #SushantSinghRajput என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்