கட்டிய வீட்டை ஏழைகளுக்கு தானமாக கொடுக்க முடிவு செய்த சூர்யா - குவியும் வாழ்த்து - ரசிகர்கள் மகிழ்ச்சி
தற்போது இயக்குநர் பாலா, நடிகர் சூர்யாவை வைத்து புது படம் இயக்கி வருகிறார்.
'நந்தா', 'பிதாமகன்' படங்களுக்குப் பிறகு இப்படத்தில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மற்றொரு நாயகியாக, மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
தற்போது, இப்படத்திற்கான ஷூட்டிங் கன்னியாக்குமரியில் நடைபெற்று வருகிறது. இப்பட ஷுட்டிங்கை 3 மாதங்களில் நடத்தி முடிக்க சூர்யா கூறியதால் ஷூட்டிங் படுவேகமாக நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்துக்காக, கன்னியாகுமரி அருகே 3 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு விரைவில் ஷூட்டிங் தொடங்கப்பட உள்ளது. படப்பிடிப்பு முடிந்தவுடன் அந்த 3 வீடுகளையும் கன்னியாகுமரியில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த ஏழைகளுக்கு வழங்க நடிகர் சூர்யா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சூர்யா ‘அகரம் ஃபவுண்டேஷன்’ மூலம் ஏராளமான ஏழை மாணவ-மாணவிகளுக்கு உதவி செய்து வருகிறார். அதேபோல் ‘ஜெய்பீம்’ படத்தில் வாங்கிய பணத்தை பழங்குடியின மக்களின் நல வாழ்விற்காக தமிழக அரசிடம் வழங்கினார்.
தற்போது, ஷுட்டிங்கில் கட்டப்பட்ட 3 வீடுகளை வீணடிக்காமல் ஏழைகளுக்கு வழங்க நடிகர் சூர்யா முடிவெடுத்துள்ள செயல் பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இச்செயலை பாராட்டி சமூகவலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.