சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கிய இயக்குனர்கள் - ட்ரெண்டாகும் WeStandwithSurya: ரசிகர்கள் மகிழ்ச்சி

Suriya Jai Bhim #WeStandwithSurya
By Anupriyamkumaresan Nov 15, 2021 01:35 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

சூர்யா நடிப்பில் ஜெய் பீம் திரைப்படம் வெளியானது முதல் சிறந்த விமர்சனங்களை பெற்று இந்தியளவில் பெரிய வரவேற்பை பெற்றது ஜெய் பீம் திரைப்படம். மேலும் எவ்வளவு வரவேற்பை பெற்றாலும் இப்படத்திற்கு வரும் எதிர்ப்புகளும் தொடர்ந்து வந்துகொண்ட தான் இருக்கிறது.

அதன்படி அன்புமணி ராமதாஸ் இப்படத்தில் குறிப்பிட்ட சமூகம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி பதிலளிக்கும்மாறு சூர்யாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கிய இயக்குனர்கள் - ட்ரெண்டாகும் WeStandwithSurya: ரசிகர்கள் மகிழ்ச்சி | Actor Surya Support By Directors

அதனை தொடர்ந்து சூர்யாவும் அவர் தரப்பு பதிலை அறிக்கையின் மூலம் வெளியிட்டு இருந்தார், அதற்கு ஆதரவாக பலரும் தங்களின் கருத்துகளை கூறியிருந்தனர்.

இதனிடையே இன்று வன்னியர் சமூகம் குறித்து ஜெய் பீம் திரைப்படத்தில் தவறாக தகவல் பரப்பட்டுள்ளதாக வன்னியர் சங்கம் சூர்யாவிடம் நஷ்ட்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

இதனால் தற்போது சூர்யாவிற்கு ஆதரவாக இயக்குனர்கள் பா.ரஞ்சித், PS மித்ரன் உள்ளிட்டோர் #weStandwithSurya ஹாஷ் டேக்கை புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.