சார்ப்பட்டா பரம்பரை திரைப்பட குழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து!

Actor Surya Sarpatta Parambarai Movie
By Thahir Jul 29, 2021 09:51 AM GMT
Report

சார்ப்பட்டா பரம்பரை திரைப்பட குழுவினருக்கு நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சார்ப்பட்டா பரம்பரை திரைப்பட குழுவினருக்கு  நடிகர் சூர்யா வாழ்த்து! | Actor Surya Sarpatta Parambarai Movie

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சார்ப்பட்டா. இதில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா நடித்திருந்தார்,இத்திரைப்படம் குறித்து திரை பிரபலங்கள் உட்பட அரசியல் பிரபலங்கள் வரை அனைவரின் கவனத்தையும் பெற்ற இத்திரைப்படம் அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படம் மக்கள் மத்தியிலும் அதிகம் பார்க்கும் படமாகவும் மாறியுள்ளது.சார்ப்பட்டா திரைப்படம் ஆளும் திமுக அரசை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் திமுக கட்சி சார்ந்த திரைபட காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

இதனையடுத்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது.வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது!வாழ்த்துகள்!! என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வாழ்த்துகள் நன்றி கூறியுள்ள நடிகர் ஆர்யா உங்கள் ஆதரவுக்கு எனது மில்லியன் கணக்கான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.