தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல - நீட் எழுதும் மாணவர்களுக்கு நடிகர் சூர்யா அளித்த நம்பிக்கை
மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல என நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார். "நான் அத்தனை தேர்வுகளில் தோற்றிருக்கிறேன். கேவலமாக தோற்றிருக்கிறேன், மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல என நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார்.
சமீப நாட்களாக நீட் தேர்வு தற்கொலைகள் அரங்கேறி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எதற்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல என பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சூர்யாவும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நான் அத்தனை தேர்வுகளில் தோற்றிருக்கிறேன். கேவலமாக தோற்றிருக்கிறேன். மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல. நம்பிக்கையோடு தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் அனைவரும் ஜெயிக்கலாம்.
பெரிதாக ஜெயிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ஒரு பரீட்சை உங்கள் உயிரை காட்டிலும் பெரிதல்ல. மாணவர்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என ஒரு அண்ணணாக வேண்டி கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.