அடுத்தடுத்து நடிகர்களுக்கு வரும் சிக்கல்? - நடிகர் சூர்யா மனு தள்ளுபடி
highcourt
actor surya
petition dismissed
By Anupriyamkumaresan
வருமான வரி மீதான வட்டியை செலுத்த தடை கோரி நடிகர் சூர்யா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2007-2008,2008-2009 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரூ.3.11 கோடி செலுத்த வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. 3 வருடங்களுக்கு பிறகு வருமான வரி கணக்கிட்டு வசூலிக்கப்பட்டதால் வட்டியை வசூலிக்க தடை கோரி நடிகர் சூர்யா வழக்கு தொடர்ந்தார்.

வருமான வரி மதிப்பீட்டிற்கு நடிகர் சூர்யா ஒத்துழைப்பு கொடுக்காததால் வட்டி விலக்கு பெற உரிமையில்லை என வருமான வரித்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வருமான வரித்துறையின் வாதத்தை ஏற்று சூர்யாவின் வழக்கை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.