நடிகர் சூர்யா உருவப்படம் எரிப்பு - வன்னியர்களின் செயலால் ரசிகர்கள் ஆவேசம்!
ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரிப்பதாக கூறி ஏராளமான பாமகவினர் நடிகர் சூர்யாவின் உருவப்படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் இருளர் இன மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் காட்சியகப்படுத்தப்பட்டன. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், இதில் உதவியாளராக நடித்த குருமூர்த்தி என்பவரின் வீட்டில் வன்னியர் சங்க சின்னமான அக்னி கலசம் பதித்த காலண்டர் இடம் பெற்றிருந்தது. இதனால் கொந்தளித்த வன்னியர் சங்க அமைப்பினர், அந்த படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தப்பட்டதாக கூறி அவர்களது எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் ஜெய் பீம் திரைப்படத்தை எதிர்த்து ஏராளமான வன்னியர்கள் சங்க அமைப்பினர் மற்றும் பாமகவினர் ஒன்றாக இணைந்து நடிகர் சூர்யாவின் உருவப்படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.