என் தமிழ் , கையில் காளை அசத்தலாக தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன சூர்யா
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநருமான வெற்றிமாறன் சூர்யாவுடன் முதன்முறையாக வாடி வாசல் படத்தில் இணைந்திருக்கிறார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலைத் தழுவி தற்போது இந்தப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப்படம், ஜிவிக்கு 75வது திரைப்படம் என்று ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.
வாடிவாசல் டெஸ்ட் ஷூட்டானது கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. முன்னதாக, இந்த படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் படு வைரலாகியது.
அதில், ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் எப்படி இருக்குமோ, அதேபோல் செட் அமைக்கப்பட்டு அதில் நடிகர் சூர்யா மற்றும் வெற்றிமாறனுக்கு மரியாதையும் செலுத்தப்பட்டது.
இந்தநிலையில், தமிழ் புத்தாண்டு முன்னிட்டு நடிகர் சூர்யா, ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு மேல், இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது, இதைப்பார்த்த நடிகர் சூர்யா ரசிகர்கள் வீடியோவை இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.