சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காகத்தான். அதன் குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல - நடிகர் சூர்யா!
ஒளிப்பரப்பு சட்டத்திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக நடிகர் சூர்யா ’சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காகத்தான். அதன் குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதாவை கடந்த 18-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டதில் இருந்தே இந்தியா முழுக்க உள்ள பல திரைக் கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில், இயக்குநர் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் உள்ளிட்ட 1400 கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினர். அதில், ஏற்கனவே, கலைஞர்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் சூழலில், இந்த புதிய சட்ட திருத்த வரைவு அதனை இன்னும் வலுவாக்கும் எனக் குறிப்பிட்டிருந்தனர். மேலும், தணிக்கை சான்றிதழ் தொடர்பாக முடிவெடுக்கும் உச்ச அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பது, கருத்து சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் செயல் எனவும் அவர்கள் கண்டித்திருந்தனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யாவும் தற்போது ஒளிப்பரப்பு சட்டத்திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக ’சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காகத்தான். அதன் குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல” என்று அழுத்தமாக பதிவிட்டுள்ளார்.