''சூர்யா மன்னிப்பு கேட்டே ஆகணும் '' - கொந்தளித்த இயக்குநர் கவுதமன்
ஜெய் பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா , இயக்குநர் ஞானவேல் ஆகியோர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என இயக்குநர் கவுதமன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
செந்தமிழ் நாடு திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கவுதமன் .
கர்நாடகத்தில் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளும் வலிகளும் ஏராளம். நான் தமிழன் என்பதால் கர்நாடகா மாநிலத்தில் மற்றவர்களை குறை கூறவில்லை எனவும், சதாசிவம் கமிஷன் பரிந்துரை செய்தது போல் 2.5 கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்க வேண்டும் என கூறினார்.
பின்னர் ஜெய் பீம் படம் தொடர்பாக கருத்து தெரிவித்த கவுதமன் ஜெய் பீம் படம் நல்ல காவியம்.
அதை வரவேற்கிறோம். ஆனால் படத்தில் பல காட்சிகள் தவறாக உள்ளதாக கூறிய கவுதமன்.
ஜெய் பீம் படத்தில் அந்தோணி சாமி கதாபாத்திரத்தை குரு மூர்த்தியாக மாற்றியது ஏன் ? காலண்டரில் அக்னி சட்டியை வைத்தது ஏன்? இந்த காட்சிகள், வன்னியர் சமுதாயத்தை தூண்டும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும் கூறினார்.
இதற்காக சூர்யா மற்றும் ஞானவேல் ஆகியோர் பத்திரிகையாளர் முன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆவேசமாக கூறினார்.