தேசிய விருது பெற்றார் நடிகர் சூர்யா - மொபைலில் போட்டோ எடுத்த ஜோதிகா

Suriya Jyothika Government Of India
By Thahir Sep 30, 2022 01:06 PM GMT
Report

‘சூரரைப்போற்று’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, நடிகர் சூர்யாவுக்கு வழங்கினார்.

தேசிய விருது பெற்றார் சூர்யா 

கடந்த 2020ம் ஆண்டு வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படத்திற்கு மொத்தம் 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அதில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

அதன்படி இன்று மாலை டெல்லியில் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் நடிகர் சூர்யா தேசிய விருதை பெற்றார்.

தேசிய விருது பெற்றார் நடிகர் சூர்யா - மொபைலில் போட்டோ எடுத்த ஜோதிகா | Actor Suriya Won The National Award

பின்னர் சூரரைப்போற்று படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அபர்ணா முரளிக்கு வழங்கப்பட்டது.

தேசிய விருது பெற்றார் நடிகர் சூர்யா - மொபைலில் போட்டோ எடுத்த ஜோதிகா | Actor Suriya Won The National Award

மேலும் சூரரைப்போற்று படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது தயாரிப்பாளர் ஜோதிகாவுக்கு குடியரசு தலைவர் வழங்கினார்.

தேசிய விருது பெற்றார் நடிகர் சூர்யா - மொபைலில் போட்டோ எடுத்த ஜோதிகா | Actor Suriya Won The National Award

தேசிய விருது வழங்கும் விழாவில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகன் தேவ், மகள் தியா ஆகியோருடன் கலந்து கொண்டார்.