“இறுதிவரை போராடிய விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள்” - நடிகர் சூர்யாவின் வைரல் ட்வீட்
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து நடிகர் சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மத்திய பாஜக அரசால் மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த ஒரு வருடமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே குருநானக் ஜெயந்தியையொட்டி, பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நேர்ந்திரே மோடி உரையாற்றினார். அப்போது மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை வரும் குளிர்கால கூட்டத்தொடரில் திரும்பப் பெறுவதாக அவர் தெரிவித்தார். இதற்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், அரசியல் தலைவர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் நடிகர் சூர்யா ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “உழவே தலை விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…” என தெரிவித்துள்ளார்.