படமாகிறதா வேள்பாரி, சஸ்பென்ஸ் வைத்த சூர்யா !
நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டைமெண்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படத்தின் ட்ரைலரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.
விருமன் ட்ரைலர்
இந்த விழாவில் இயக்குநர் இமயம் பாரதி ராஜா, பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, விருமன் படத்தின் நடிகர் கார்த்தி நடிகை அதிதி, நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் படத்தின் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், இந்த விழாவில் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்.
வேல்பாரி திரைப்படமாகிறதா
விழாவில் பேசிய சூர்யா முக்கிய சஸ்பென்ஸ் ஒன்றை வைத்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனை புகழ்ந்து மேடையில் பேசிய சூர்யா ஒரு இன்ப அதிர்ச்சியை சஸ்பென்சாக தெரிவித்தார்.
மேடையில் பேசிய சூர்யா, காவல்கோட்டம் மற்றும் வேள்பாரி ஆகிய நூல்களை பாராட்டி அதனை எழுதிய எம்பியும் எழுத்தாளருமான சு. வெங்கடேசனை புகழ்ந்து பேசினார்.
சூர்யா
அப்போது எங்களுக்குள் ஒரு முக்கிய பயணம் தொடங்கியுள்ளது. அடுத்த மேடையில் அது தொடர்பான அறிவிப்பு இருக்கும் எனத் தெரிவித்தார்.
வெங்கடேசனின் எழுத்தை சூர்யா எதாவது திரைப்படமாக இயக்க உள்ளாரா என ரசிகர்கள் ஆர்வமுடன் பதிவிட்டு வருகின்றனர். வேள்பாரியை திரைப்படமாக எடுக்க வாய்ப்பிருக்கலாம் எனவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்