“நீரும் செம்புல சேறும் கலந்தது போலே கலந்தவர் நாம்” - இணையத்தை கலக்கும் நடிகர் சூர்யா-ஜோதிகாவின் புகைப்படம்
கோலிவுட் வட்டாரத்தில் பலருக்கும் ஃபேவரைட் மற்றும் பலரின் நன்மதிப்பை பெற்ற ஜோடிகள் என்றால் அது சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடி என்றே கூறலாம்.
1999-ம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் மூலமாக முதன் முதலில் அறிமுகமான இந்த ஜோடி , அதன் பிறகு நட்பு , காதல் என வெவ்வேறு நிலைகளை அடைந்தது.
நீண்ட நாட்கள் காதலித்து வந்த இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த ஜோதிகா அதன் பிறகு குழந்தை , குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது சூர்யா-ஜோதிகா தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். குழந்தைகள் இருவரும் வளர்ந்த பிறகு மீண்டும் ஜோதிகா கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.
அவரின் நடிப்பு திறமையை ஊக்கப்படுத்தும் நடிகர் சூர்யா , படக்காட்சி ஒன்றிற்காக ராயல் எண்ஃபீல்ட் பைக் ஓட்டுவதற்கு தன் மனைவிக்கு கற்றும் கொடுத்தார் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சூர்யா சமீபத்தில் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஜெய் பீம். அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யா தனது குடும்பத்துடன் கேரளாவிற்கு விசிட் அடித்தார்.
அப்போது பீச்சில் இருவரும் வாக்கிங் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலானது.
இந்நிலையில் மும்பை சென்றுள்ள தம்பதிகள் இருவரும் மும்பை சிட்டியில் வழக்கம் போல தங்கள் வாக்கிங் பயிற்சியை செய்துள்ளனர்.
@Suriya_offl & Jo Recent click !❤️#EtharkkumThunindhavan pic.twitter.com/IGfNPOW1AF
— Anbuselvan™? (@Raj_twetz) December 29, 2021
அதனை புகைப்படம் எடுத்த ரசிகர் ஒருவர் இணையத்தில் பதிவேற்றியுள்ளார். அதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.