அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் ஸ்ரீ; அதிர்ச்சியில் ரசிகர்கள் - இதுதான் காரணமா?
எலும்பும் தோலுமாக நடிகர் ஸ்ரீ வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஸ்ரீ
2012 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான 'வழக்கு எண் 18/9' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ.
அதைத்தொடர்ந்து, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, சோன் பப்படி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படத்தில் நடித்தன் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
கடைசியாக 2023 ஆம் ஆண்டு வந்த இறுகப்பற்று படத்திற்கு பின்னர் இவர் சினிமாவில் தலை காட்டவில்லை.
தற்போது எலும்பும் தோலுடன், நீண்ட முடியுடன் உள்ள படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஸ்ரீ க்கு என்ன ஆகிவிட்டது என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
என்ன காரணம்?
அவர் நடித்து வரும் புதிய படத்திற்கான ப்ரோமோஷனா என சில ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர் புதிய படம் எதிலும் ஒப்பந்தமாகாத நிலையில் அவருக்கு ஏன் இந்த நிலை என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
அதேவேளையில், அவர் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், முன்னர் நடித்திருந்த இறுகப்பற்று, வில் அம்பு படத்தில் நடித்ததற்கு தனக்கு வர வேண்டிய பணம் இன்னும் வரவில்லை என கூறியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் தான் இந்த நிலைக்கு காரணமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரசிகர்களின் கேள்விக்கு அவர் தற்போது வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.